கோவிட்-19லிருந்து மீண்டார் அமித் ஷா! - Amit Shah twitter
17:03 August 14
டெல்லி கோவிட்-19 பாதிப்பில் இருந்த மீண்டுள்ள மத்திய உள்துறை அமித் ஷா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி அமித் ஷாவுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், இவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆலோசனைகளை வழங்கிவந்தது. இந்தநிலையில், இன்று(ஆகஸ்ட்.14) அமித் ஷாவுக்கு, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி என்றும், எனது உடல் நலன் குறித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சில நாட்கள் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளப் போகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி