ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இஃப்தார் விருந்து வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இணைந்து இஃப்தார் விருந்து வைத்துள்ளனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரி ராஜ் சிங், "ரமலான் பண்டிகையை கொண்டாடும் போது இருக்கும் ஏற்பாடுகள் நவராத்திரி விழாவின் போது இருப்பதில்லை ஏன்? " என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
'பார்த்து பேசுங்கள்..!' - கட்சியினரிடம் அமித் ஷா காட்டம்! - பாஜக
பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து, இதுபோல் பேசுவதை தவிர்க்குமாறு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
!['பார்த்து பேசுங்கள்..!' - கட்சியினரிடம் அமித் ஷா காட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3472070-thumbnail-3x2-nda.jpg)
Giriraj singh
இது பாஜக கூட்டணி வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது போன்று கருத்து வெளியிடுவதை தவிர்க்கும்படி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார்.