அஸ்ஸாம் மாநிலத்தில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனவால், நிதித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் ஒரு பகுதியே. இந்த உணர்வை பரப்ப காங்கிரஸ் இல்லாத வட கிழக்கு மாநிலங்களை உருவாக்க வேண்டும். வட கிழக்கைச் சேர்ந்த எட்டு மாநிலங்களையும் வட கிழக்கு ஜனநாயக கூட்டணி ஆள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.