தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேருவின் முடிவுதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் - அமித் ஷா - காஷ்மீர்

டெல்லி: தவறான நேரத்தில் நேரு போர் நிறுத்தத்தை அறிவித்ததால்தான் காஷ்மீர் பிரச்னை ஏற்பட்டது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit Shah

By

Published : Sep 29, 2019, 7:56 PM IST

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு நான் விளக்கம் தர விரும்புகிறேன். 1947ஆம் ஆண்டு முதலே காஷ்மீரில் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், திரிக்கப்பட்ட வரலாறே மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

தவறு இழைத்தவர்களிடம் வரலாற்றை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் உண்மை மறைக்கப்படுகிறது. உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 370 காரணமாக காஷ்மீர் பண்டிதர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது மனித உரிமை ஆர்வலர்கள் எங்கே போனார்கள். அடுத்த 4-5 நாட்களில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கும். தவறான நேரத்தில் நேரு போர் நிறுத்தத்தை அறிவித்ததால்தான் காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. காஷ்மீர் விவகாரத்தை ஐநாவுக்கு நேரு எடுத்துச் சென்றது இமாலய தவறு" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details