தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்த மசோதா: முதலமைச்சர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர்! - Amit Shah meets North-East CMs to discuss outline of Citizenship Bill

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் இடையேயான சந்திப்பு கூட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amit Shah
Amit Shah

By

Published : Dec 1, 2019, 12:00 AM IST

வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோரை உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் சந்தித்து பேசினார். குடியுரிமை திருத்த மசோதா குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கபட்டது. அஸ்ஸாம் முதலமைச்சர் ஸர்பனந்த சோனோவால், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, மேகாலயா முதலமைச்சர் கான்ரட் சங்மா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "குடியுரிமை திருத்த மசோதாவிற்கு மக்களிடையே ஆதரவை பெற அமித் ஷா முயன்றுவருகிறார். அனைத்தும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறது" என்றார். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: தெலங்கானாவில் தொடரும் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details