மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீணடும் ஆட்சியமைக்க உள்ளது. இதில், குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக தலைவர் அமித் ஷா, முதல் முறையாக அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதித்துறை அமைச்சராகிறார் அமித் ஷா? - modi
டெல்லி: புதிய மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித் ஷா இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷா
இது தொடர்பாக குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி தனது ட்விட்டர் பக்கத்தில், " மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வலுவான நபர் இடம்பெற்றுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அமித் ஷா அமைச்சரவையில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியல் சிறு நேரத்தில் வெளியாக உள்ளது.
Last Updated : May 30, 2019, 5:35 PM IST