இன்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானின் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதியே அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீர் அலுவலர்களாலேயே எடுக்கப்பட்டது.
எப்போது நிலைமை சீரானதாக அவர்கள் கருதுகிறார்களோ அப்போது இந்த தடை விலக்கப்படும். போதிய அளவிலான மருந்துகளும் மக்களுக்குக் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போது மருத்துவ வாகன சேவையும் அங்குத் தொடங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டிசல், சமையல் எரிவாயு, அரிசி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போதிய அளவு இருக்கிறது. மேலும், வரும் காலங்களில் காஷ்மீரிலிருந்து 22 லட்சம் டன் ஆப்பிள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.