தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாமரையை ஏற்க மறுத்த அமித்ஷா பேத்தி! - அமித் ஷா பேத்தி

காந்திநகர்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பேத்தி தாமரை சின்ன தொப்பியை அணிய மறுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அமித் ஷா

By

Published : Mar 31, 2019, 7:36 AM IST

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் களமிறங்குவதால் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படக்கூடிய தொகுதியாக காந்திநகர் மாறியிருக்கிறது.

இந்நிலையில், அமித்ஷா பேரணியாக சென்று நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையொட்டி, அவருக்கு உறவினர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது, அவர் தனது பேத்தியை கொஞ்சிக்கொண்டிருந்தார். அதனையடுத்து, அச்சிறுமி அணிந்திருந்த தொப்பியை கழற்றிவிட்டு தாமரைச் சின்னம் இருக்கும் தொப்பியை அவரது தலையில் அணிவிக்க அமித்ஷா முயன்றார். ஆனால் சிறுமியோ, அந்த தொப்பியை அணிய மறுத்து, ஏற்கனவே தான் அணிந்திருந்த தொப்பியை கொடுத்தபோது எந்தவித மறுப்புமின்றி அணிந்துகொண்டார்.

இதையடுத்து, பாஜக தேசிய தலைவரின் பேத்தியே தாமரை சின்னத்தை மறுக்கிறார் என எதிர்க்கட்சியினர், சமூக வலைதளவாசிகள் உட்பட பலர் கூறிவருகின்றனர். மேலும், இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details