ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிாிவு 370 மற்றும் 35 ஏ மத்திய அரசால் அண்மையில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மாநிலத்துக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக ஜம்மு காஷ்மீர் யூனியர் பிரதேசத்தை தலைநகர் டெல்லியோடு இணைக்கும் விதமாக 'வந்தே பாரத்' என்ற ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி, இரவு 2 மணிக்கு கத்ரா நகருக்கு சென்றடையும்.
இடையே அம்பலா நதிக்கரை, லூதியானா மற்றும் ஜம்மு தாவி ஆகிய ரயில் நிலையங்களில் முறையே இரண்டு நிமிடங்கள் நிற்கும். இந்த ரயில்சேவையை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
பின், கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு கிளம்பி தலைநகர் டெல்லிக்கு இரவு 11 மணிக்கு வந்தடையும்.
செவ்வாய்க்கிழமை நீங்கலாக வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் இயக்கப்படும் என்றார்.