தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூட்டணிக்கட்சித் தலைவர்கள் புடைசூழ அமித் ஷா வேட்புமனு தாக்கல் - வேட்புமனு

காந்திநகர்: முதன்முதலாக மக்களவைத்தேர்தலில் போட்டியிடும் பாஜகத் தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் புடைசூழ பிரம்மாண்ட பேரணி நடத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமித் ஷா

By

Published : Mar 30, 2019, 5:03 PM IST

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் பாஜக மூத்தத்தலைவர் அத்வானி பாரம்பரியமாகப் போட்டியிடுவது வழக்கம். இம்முறை பாஜக சார்பில் காந்திநகர் தொகுதியில் அத்வானி நிறுத்தப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக பாஜக தலைவர் அமித்ஷா அங்கு களமிறங்குகிறார். தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவந்த அமித்ஷாவுக்கு குஜராத் மாநில பாஜக சார்பில் பிரம்மாண்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமித்ஷா பேரணி

அமித் ஷா வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி பாஜக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் பலரும் உடன் வந்திருந்தனர். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்ரே, அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பாஜக முன்னணித் தலைவர்களானராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் புடைசூழ பேரணியில் கலந்து கொண்டார்.

படேல் சிலைக்கு மாலை அணிவித்த அமித் ஷா

பின், அங்கிருந்த சர்தார் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமித் ஷா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details