தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஏஏ போராட்டக்காரர்களுடன் அமர துணிச்சல் உள்ளதா? - கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா சவால் - டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2020

டெல்லி: ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டக்கார்களுடன் அமர முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு துணிச்சல் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாவல் விடுத்துள்ளார்.

amit shah takes a swipe at Kejriwal
amit shah takes a swipe at Kejriwal

By

Published : Jan 28, 2020, 9:25 AM IST

டெல்லியில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியின் ரத்வாலா பகுதியில் பரப்புரை மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இந்தியாவிடமிருந்து வடகிழக்கு மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் எனக் கூறிய ஷாஜீல் இமாம் என்ற ஜேஎன்யூ மாணவர் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கெஜ்ரிவாலிடம் நான் கேட்க நினைப்பதெல்லாம் இதைத்தான். ஷாஜீல் இமாமை கைது செய்ய சம்மதமா, இல்லையா? ஷாஹீன் பாக்கில் உள்ள போராட்டக்கார்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையா?

நீங்கள் ஷாஹீன் பாக் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். துணிச்சல் இருந்தால் போராட்டக்கார்களுடன் அங்கு சென்று அமருங்கள் பார்ப்போம். பிறகு டெல்லி மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்யட்டும்' என சவால் விடுத்தார்.

இதையும் படிங்க : 'பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சட்டம்'

ABOUT THE AUTHOR

...view details