கடந்த 2ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! - மீண்டும் உள்த்துறை அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி...!
![அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! amit-shah-admitted-to-aiims-in-delhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8460153-thumbnail-3x2-zdg.jpg)
10:55 August 18
டெல்லி: கரோனா சிகிச்சைக்குப் பின்னான மருத்துவத்திற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதில் அமித் ஷாவிற்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆலோசனைகளை வழங்கிவந்தது.
இதனையடுத்து, கடந்த 14ஆம் தேதி அமித் ஷாவுக்கு, கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அமித் ஷா அன்றே (ஆக. 14) வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது, கரோனா மருத்துவத்திற்குப் பின்னான சிகிச்சைக்காக அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க...கோவிட்-19லிருந்து மீண்டார் அமித் ஷா!