தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக நிலைக்காது' - அமித் ஷா - அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக நிலைக்காது

டெல்லி : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக என்றும் நிலைத்திருக்காது, சாதகமான சூழ்நிலைகள் அமைந்தால் அதனுடைய மாநில நிலையை மீண்டும் பெறும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

By

Published : Oct 8, 2019, 9:33 AM IST

ஐபிஎஸ் 2018 குழுவை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இதில், அரசியலமைப்புச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக என்றும் நிலைத்திருக்காது, அதற்கு சாதகமான சூழ்நிலைகள் அமைந்தால் அதனுடைய மாநில நிலையை மீண்டும் பெறும் எனக் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு காஷ்மீர் கலாசாரத்தை பாதுகாக்கிறது என்கின்ற கருத்து மிகவும் தவறானது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்திய அரசியலமைப்பினால் அனைத்து பிராந்திய அடையாளங்களும் பாதுகாக்கப்படுகிறது என உள் துறை அமைச்சர் கூறினார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அவசியம் குறித்து பேசிய அவர், இந்தப் பதிவேடு தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் நல்ல ஆட்சிக்கும் அவசியமானது என்றார்.

அதுமட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியின் நன்மைகள் குடிமக்கள் அனைவருக்கும் செல்வதை உறுதி செய்வதற்காக தேசிய குடிமக்கள் பதிவு செய்வது மிக அவசியம் என்றார். இளம் பணியாளர்கள் நேர்மையான வழியை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : நேருவின் முடிவுதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details