தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2020, 12:25 AM IST

ETV Bharat / bharat

விலங்கியல் பூங்காக்களில் சுகாதார நிலையை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!

டெல்லி: விலங்கியல் பூங்காக்களில் சுகாதார நிலையை கடைப்பிடிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

21 day lockdown and animals zoo animal care in lockdown central govt told states to take care of zoo animals which ministry takes acre of zoo animals விலங்கியல் பூங்காக்களில் சுகாதார நிலையை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்! கரோனா பாதிப்பு, விலங்கியல் பூங்கா, சுகாதார கட்டுப்பாடு, மத்திய அரசு உத்தரவு

நாடு முழுக்க கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இதையடுத்து மக்கள் ஊரடங்கு மேலும் 21 நாள்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒடிசாவில் கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுவருகிறது.

இந்நிலையில் நாட்டின் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திலுள்ள விலங்கியல் பூங்காக்கள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அங்குள்ள விலங்குகளுக்கு சரியான உணவு, தண்ணீர் மற்றும் இதர வசதிகளை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக விலங்குகள் கஷ்டப்படுகின்றன என்று தகவல் வெளியானது. இதையடுத்து அத்தியாவசிய சேவையின் கீழ் உயிரியல் பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதியளிக்கும் வகையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: கேரளாவில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details