தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பரவல்: ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை வழங்கும் கொல்கத்தா உணவகம்! - மேற்கு வங்க செய்திகள்

கொல்கத்தா: கரோனா பரவல் காரணமாக ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை கொல்கத்தாவிலுள்ள உணவகம் ஒன்று அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை வழங்கும் கொல்கத்த உணவகம்
ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை வழங்கும் கொல்கத்த உணவகம்

By

Published : Oct 19, 2020, 11:19 AM IST

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களும் மூடப்பட்டன. மத்திய அரசு, பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முகக்கவசங்கள் கட்டாயம் அணிவது, உடல் வெப்ப சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளுடன் ஹோட்டல்கள் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள வோக்கிஸ் (Wok'ies) என்ற உணவகம், தனது வாடிக்கையாளரகளுக்கு ஜிப்புடன் கூடிய புது வகை மாஸ்க்குகளை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் மாஸ்க்குகளை கழற்றாமலேயே வாடிக்கையாளர்களால் உணவை உட்கொள்ள முடியும்.

இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் சோமோஷ்ரீ சென்குப்தா கூறுகையில், "கோவிட் 19 பரவலால் மாஸ்க்குகள் அணிவது தனிநபர் பாதுகாப்பிற்கும் சமூகத்தின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் மூலம் மாஸ்க்குகளை கழற்றாமலேயே வாடிக்கையாளர்களால் உணவை உட்கொள்ள முடியும்.

இந்த மாஸ்க்குகளை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்" என்றார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி மேற்கு வங்கத்தில் 33,121 பேர் கரோனா காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுமார் 2,77,940 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வலதுசாரிகளுக்கு மத்தியில் தோன்றிய இடதுசாரி மக்கள் தலைவர் ஜெசிந்தா!

ABOUT THE AUTHOR

...view details