கோவிட்-19 தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியபோதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜவின் சிவராஜ் சிங் சவுஹான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை.
இதனால் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது மத்தியப் பிரதேசத்தில் சுகாராதத் துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இல்லாமல், முதலமைச்சரே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் சுகாதாரத் துறை உட்பட முக்கிய துறைகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இருப்பினும் இதுவரை மத்தியப் பிரதேசத்தில் கோவிட்-19 பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.