தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எச்1பி விசா மறுப்பு, மோடிக்கு கிடைத்த வெற்றி' - பிரியங்கா காந்தி கிண்டல்! - பிரியங்கா காந்தி

டெல்லி: இந்தியர்களுக்கு எச்1பி நுழைவு இசைவு (விசா) வழக்கத்துக்கு மாறாக அதிகமாக மறுக்கப்படுவது, நரேந்திர மோடியின் ஹவுடி-மோடி நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

America H1B Visa Denied says Priyanka Gandhi

By

Published : Nov 7, 2019, 4:03 PM IST

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-

பாரதிய ஜனதா அரசாங்கத்தின் வளர்ச்சி எங்கே? என்று அனைவரும் கேள்வி கேட்கின்றனர். ஆனால் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் அமெரிக்காவிலோ, வழக்கத்துக்கு மாறாக இந்தியர்களுக்கு எச்1பி நுழைவு இசைவு (விசா) மறுக்கப்படுகிறது. இதனால் அதிகமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

பிரியங்கா காந்தி ட்வீட்

மற்றொரு ட்வீட்டில், நாட்டில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. பொதுச்சேவை துறைகள் பாதாளத்தில் வீழ்கின்றன. வேலைவாய்ப்புகள் கீழ்நோக்கிச் செல்கிறது. மக்கள் கஷ்டத்தில் தவிக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நகைச்சுவை சர்க்கஸ் இயக்குவதை நிறுத்துங்கள் - பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details