தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'குழந்தை திருமணத்திற்கு எதிராக கடுமையாக சட்டம் திருத்தம் செய்யப்படும்' - ஸ்மிருதி ராணி - டெல்லி போஷான் அபியான் கூட்டம்

டெல்லி: குழந்தை திருமணத்தை ஒழிக்க கடுமையாக சட்டம் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி ராணி
ஸ்மிருதி ராணி

By

Published : Nov 26, 2019, 2:53 PM IST

டெல்லியில் 'போஷான் அபியான்' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இரண்டு நாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்குபெற்றார்.

நிகழ்ச்சியில் அவர் 'சிறுமியர்களின் திருமணம்' குறித்து தலைப்பில் பேசினார், அதில், "இந்தியாவில் 18 வயது குறைவாக இருக்கும் 21% சதவீதம் உள்ள சிறுமிகள் கர்பிணியாகி இருக்கிறார்கள் என்று சமிபத்தில் குழந்தைகள் திருமணம் குறித்து கணக்கெடுப்பில் எடுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் பாலியல் துன்புறத்தலில் உள்ளாக்கப்படும்போது, அதை செய்கின்ற நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாகிறார்.

ஆனால், இதே 18 வயதிற்கு முன்பு சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்துவிக்கும் நபர்களுக்கு தண்டனை இருக்கிறது ஃப்இருப்பினும் அவை கடுமையாக இல்லை, அப்படி அதற்கான சட்டங்கள் கடுமையாக இருக்கும்பட்சத்தில் இந்த சம்பவங்கள் அரங்கேறுவது குறையும். ஆகையால், குழந்தை திருமண சட்டம் 1929இல் திருத்தம் செய்ய ஆலோசனை நடத்திவருகிறோம்.

அதன்படி குழந்தை திருமணம் செய்துவித்து அந்த குற்றச்செயலில் ஈடுபடும் ஒவ்வொரும் தண்டிக்கப்படுவார்கள். மேலும் இது குறித்து நிதி ஆயோக்கிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை குறித்த தரவுகளை சேகரிக்கக் கோரியதாக" அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: 'மறக்க முடியாத துயர்' - மும்பைத் தாக்குதலின் 11ஆவது நினைவு தினம்...!

ABOUT THE AUTHOR

...view details