தெலங்கனா மாநிலம், ஹைதராபாத் நகரம் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். மாநிலத்தின் இதயப்பகுதியான இந்த பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கிய பங்குகாற்றுகின்றன. ஏற்கனவே இரண்டு கட்டமாக மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இறுதி கட்டமாக அமீர்பேட் - ஹைடெக் பகுதிக்கு இடையே பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இதை ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன் நாளை திறந்து வைக்கிறார்.
அமீர்பேட்- ஹைடெக் சிட்டி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - மெட்ரோ ரயில் சேவை
ஹைதரபாத்: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்பேட்- ஹைடெக் சிட்டி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தெலங்கானா ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன் நாளை திறந்து வைக்கிறார்.

மெட்ரோ ரயில்
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். பத்து கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஹைடெக் சிட்டி, மாதபூர், ஜூப்ளி ஹீல்ஸ், காச்சிபவூளி ஆகிய 8 நிலையங்கள் உள்ளன. இந்த தூரம் சுமார் 9 - 12 நிமிடங்களில் சென்றடையும். இந்த நிகழ்வில் குறைந்தளவிலே சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செக்கந்திராபாத், எல்பி நகர் ஆகிய வழிதடங்களில் இரண்டு கட்டமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.