தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண் கொலை - சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி - அம்பூரி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் அம்பூரி பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான அகில் என்பவர் சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்து வரப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி

By

Published : Jul 30, 2019, 12:47 PM IST

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள ஆம்பூரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராகி மோள். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் (எ) அகில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும், அகிலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையறிந்த, ராகி மோள் இது தொடர்பாக அகிலிடம் தொடர்ந்து கேட்டுள்ளார்.

தொடர்ந்து, கடந்த மாதம் 21ஆம் தேதி அகிலும், அவரது சகோதரர் ராகுலும் ராகியை சந்தித்து அவரை அகிலுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ராகியின் கழுத்தை ராகுல் நெரித்துள்ளார். அதில் மயக்கமடைந்த ராகியை மீண்டும் நைலான் கயிற்றை வைத்து நெரித்ததில் அவர் உயிரிழந்தார். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டின் பின்னால் தோண்டப்பட்ட நான்கு அடி குழியில் ராகியைப் புதைத்தனர்.

இதனையடுத்து தனது மகளை காணவில்லை என ராகியின் தாய் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே அகில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி

இந்நிலையில், நேற்று அகிலை சம்பவ இடத்துக் கூட்டிச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ராகியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அகிலை அழைத்து வந்தபோது அப்பகுதி மக்கள் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக தலைமறைவாக இருந்த அகிலின் சகோதரர் ராகுலும் கைது செய்யப்பட்டார். மேலும் இக்கொலையில் அகிலின் பெற்றோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details