இதுகுறித்து இறந்த குழந்தையின் தந்தை கூறும்போது, "காய்ச்சலில் தவித்த எங்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்துச்சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டி அவர்களிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். ஆனால், அந்த மருத்துவமனை வளாகத்தில் மூன்று ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தன. அவர்கள் ஏன் மறுப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை" எனக் கூறினார்.
பெற்ற குழந்தையை சாலையில் பறிகொடுத்த தாய்! - uttarpradesh
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், காய்ச்சலில் தவித்த கைக்குழந்தைக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அக்குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தம்பதிகளிடம் போதிய பணம் இல்லாததால், வேறு வழியில்லாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு வேறு மருத்துவமனை நோக்கி நடந்தே சென்றிருக்கிறார்கள். அப்போது, செல்லும் வழியிலே தங்களின் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக, அதன் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இதுகுறித்து அம்மருத்துவமனையில் பணிபுரியும் அனுராக் பரஷார் என்னும் மருத்துவரை கேட்டபொழுது, "மாலை 8 மணி அளவில் அஃபோஸ் என்ற குழந்தையை எடுத்துக்கொண்டு தம்பிகள் இம்மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தையின் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக லக்னோவுக்கு எடுத்துச்செல்லாமாறும் நாங்கள் அவர்களிடம் அறிவுறுத்தினோம். எனினும், அந்தக் குழந்தையின் பெற்றோர் தாங்கள் விரும்பும் இடத்திற்கே குழந்தையை எடுத்துச்செல்வோம் எனக்கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்" எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.