தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் சத்தீஸ்கர் மாநகராட்சி!

அம்பிகாபூர்: நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

plastic Segregation process
plastic Segregation process

By

Published : Dec 20, 2019, 12:25 PM IST

Updated : Dec 28, 2019, 7:31 AM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் திட்டத்தை அம்பிகாபூர் மாநகராட்சி 2017ஆம் ஆண்டே தொடங்கியது. இங்கு கடைப்பிடிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

சேகரிப்படும் குப்பைகள் அனைத்தும், தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மீன்டும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. வண்ண பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும், நிறமற்ற பிளாஸ்டிக் கழிவுகள் துகள்களாக மாற்றப்பட்டு, வேறு பல தொழிற்சாலைகளுக்கும் விற்கப்படுகின்றன.

அம்பிகாபூர் மாநகராட்சியின் இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, பெண்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகளவு ஏற்படுத்தப்படுகிறது. மற்றுமொரு தனித்துவமான முயற்சியாக, ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், இலவசமாக உணவை வழங்கும் 'கார்பேஜ கஃபே' உணவகத்தை இம்மாநகராட்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வாகிப்பதில் முன்மாதிரியாக திகழும் ஒடிசா மாநகராட்சி

இதன் மூலம் தினமும் சுமார் 10 முதல் 12 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ஒரே நாளில் 21 கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் கழிவுகள் மாநகராட்சிக்குச் சொந்தமான மறுசுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன.

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், அதுகுறித்த பொதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. அதற்குத் தேவையான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. அம்பிகாபூர் மாநகராட்சி பின்பற்றும் இத்திட்டத்தை இந்தியாவிலுள்ள அனைத்து மாநகராட்சிகளும் பின்பற்றினால், குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சரிபாதியாக குறையும்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை செங்கற்களாக உருமாற்றும் ஹிமாச்சல் மக்கள்!

Last Updated : Dec 28, 2019, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details