தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அம்பேத்கர் சிலையை நிறுவச் சென்ற காங். மூத்தத் தலைவர் கைது - ஹனுமந்த ராவ்

ஹைதராபாத்: தெலங்கானாவில் அம்பேத்கர் சிலையை நிறுவச் சென்ற காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஹனுமந்த ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

hanumantha rao

By

Published : Jun 18, 2019, 9:49 AM IST

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஹனுமந்த ராவ், அமலாபுரம் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஹர்ஷ குமார் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா மையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு அம்பேத்கர் சிலையை இருவரும் நிறுவ முயன்றுள்ளார்கள். ஆனால் சிலையை நிறுவ உரிய அனுமதி பெறாததால் ஹனுமந்த ராவ், ஹர்ஷ குமார் ஆகியோரை காவல் துறை கைது செய்தது. தெலங்கானா மாநிலம் உருவாகுவதற்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் ஹனுமந்த ராவ் ஆவார். அதுமட்டுமில்லாமல் பல சமூக நீதி போராட்டங்களையும் இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details