தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அம்பேத்கரின் சிலை அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு! - மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம்

மும்பை : மத்திய மும்பையில் நடைபெறவிருந்த அம்பேத்கர் சிலை அடிக்கல் நாட்டு விழாவை மகாராஷ்டிர அரசு ஒத்திவைத்தது.

அம்பேத்கரின் சிலை அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு!
அம்பேத்கரின் சிலை அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு!

By

Published : Sep 20, 2020, 10:11 AM IST

மத்திய மும்பையில் உள்ள இந்து மில்ஸ் வளாகத்தில் நிறுவப்படவிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று (செப்.20) நடைபெறவுள்ளாத மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், திடீரென இந்நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தில் (எம்.எம்.ஆர்.டி.ஏ) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு, கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்நிகழ்வுக்கு அம்பேத்கரின் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் அம்பேத்கர், ஆனந்தராஜ் அம்பேத்கர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், மாநில அரசின் சில அமைச்சர்களும் அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "இதுபோன்ற ஒரு முக்கியமான நிகழ்வில் அனைவரின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று நான் அலுவலர்களுக்கு சுட்டிக் காட்டினேன். நிகழ்வைத் திட்டமிடுவதில் பல தவறுகள் ஏற்பட்டிருந்தது. இது பல்வேறு பிரிவுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய காரணத்தால் மாநில அரசு இப்போது இவ்விழாவை ரத்து செய்துள்ளது. நிகழ்வை ஒத்திவைப்பது அரசியல்மயமாக்கப்படக்கூடாது.

மாற்றுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைத்து மக்களின் பங்களிப்புடனும் இந்த நிகழ்வு பின்னர் நடைபெறும் என்பது மட்டும் உறுதி" என விளக்கமளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details