தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் இன்று முதல் ஆரம்பம்! - அதிரடி சலுகை - புதிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை

பெங்களூரு: ஆன்லைனில் இன்று முதல் 23 ஆம் தேதிவரை அமேசானில் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்டில் ஆப்பிள் 11 ப்ரோ முதல் விவோ யூ போன்ற லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

Amazon India announces 'Fab Phones Fest'
amazon-india-announces-fab-phones-fest-on-dec-19-23

By

Published : Dec 19, 2019, 7:11 PM IST

ஆன்லைனின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான், ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்டை (Fab Phones fest) இன்று முதல் 23ஆம் தேதி வரை நடத்துகிறது.

விற்பனையில் ஒன் பிளஸ், விவோ, சாம்சங், ஓப்போ, வாவே, ஹானர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வழங்கும் லேட்டஸ்ட் போன்களை அதிரடி சலுகைகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பயனாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக 'நோ காஸ்ட் ஈஎம்ஐ' வசதியுடன் மேலும் பழைய மொபைல் போன்களை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் விற்றுவிட்டு, தங்களுக்குப் பிடித்த புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க இந்த ஐந்து நாள்களில் சிறப்பு சலுகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

லேட்டஸ்ட்டாக மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் ஆப்பிள் 11 ப்ரோ முதல் விவோ யூ வரை, அதனுடன் சாம்சங் கேலக்ஸி எம்40, எம்30, எம்20 என அனைத்து புதிய ரக ஆண்ட்ராய்டு போன்களும் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

ஸ்மார்ட்போன்களைத் தவிர்த்து ஹெட்போன் உள்ளிட்ட பொருள்களையும் சாம்சங், ஜப்ரா, ரியல்மீ, ஆகிய பிராண்டுகளில் மலிவான விலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: ஐந்து பில்லியன் பணப்பரிவர்த்தனையைத் தாண்டிய 'போன் பே'!

ABOUT THE AUTHOR

...view details