தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேர்மைக்கு அமேசான் அளித்த பரிசு: நபிலுக்கு நிகழ்ந்தது என்ன? - நேர்மைக்கு அமேசான் அளித்த பரிசு

திருவனந்தபுரம்: நேர்மையாக செயல்பட்ட நபிலுக்கு அமேசான் நிறுவனம் மொபைல் போனை பரிசளித்துள்ளது.

Amazon
Amazon

By

Published : Aug 21, 2020, 2:11 AM IST

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நபில். இவர் தனது தங்கையின் ஆன்லைன் வகுப்பு கல்விக்காக அமேசான் தளத்தில் 1400 ரூபாய் மதிப்புள்ள பவர் பேங்கை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த ஒரே வாரத்தில், அமேசான் பார்சல் நபிலின் வீட்டுக்கு வந்தடைந்தது. ஆனால், பார்சலில் 8000 ரூபாய் மதிப்புள்ள போன் இருந்துள்ளது.

இதனை அமேசான் நிறுவனத்திற்கு அவர் தெரியப்படுத்தினார். நபிலின் நேர்மையை பாராட்டும் விதமாக அந்த போனை நபிலே வைத்துக் கொள்ளும்படி அமேசான் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சியோமி பவர் பேங்கை ஆர்டர் செய்த நபிலுக்கு ரெட்மி 8 A மொபைல் போன் கிடைத்துள்ளது. இதனை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details