தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

அமேசான் நிறுவம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இன்று (அக்.16) முதல் தொடங்கி உள்ளது. அதேபோல பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பிக் பில்லியன் டே-வை தொடங்கியுள்ளது.

amazon great indian festival
amazon great indian festival

By

Published : Oct 16, 2020, 9:49 AM IST

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்

பண்டிகை காலம் தொடங்கி உள்ளதால் அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இன்று(அக்.16) முதல் தொடங்கி உள்ளது. முதலில் இன்று பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. நாளை அக்.17ஆம் தேதி பொது உறுப்பினர்களுக்கு தொடங்கப்படவுள்ளது.

இதில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி உள்ளன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், விற்பனை நிறுவனங்களிடமிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.

தள்ளுபடி விவரங்கள்

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களில் ரூ.6,000 வரை தள்ளுபடி.
  • மடிக்கணினிகளில் ரூ.30,000 வரை தள்ளுபடி.
  • ஹெட்ஃபோன்களில் 70 விழுக்காடு வரை தள்ளுபடி.
  • கேமராக்களில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி.
  • அண்மையில் வெளியான ஸ்மார்ட்போன்கள் 40 விழுக்காடு தள்ளுபடி.
  • அமேசான் சாதங்கள் 50 விழுக்காடு வரை தள்ளுபடி.

வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்கள் வாங்கினால், கூடுதலாக 10 விழுக்காடு தள்ளுபடி பெறலாம்.

பிக் பில்லியன் டே

அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும், தனது பிக் பில்லியன் டே-வை இன்று தொடங்கியுள்ளது. அக்.16ஆம் தேதி நள்ளிரவிலிருந்து அக்.21ஆம் வரை பிளிப்கார்ட் விற்பனை நாள்கள் நடைபெறுகிறது. விற்பனை காலத்தில் பல்வேறு பிரபலமான பிராண்டுகளை பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதில் கூகுள் பிக்சல் தயாரிப்புகள், நோக்கியாவின் ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகள் விற்பனையில் இடம்பெறவுள்ளன. வாடிக்கையாளர்கள் Paytm Wallet மற்றும் Paytm UPI மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக் ஆஃபர்களையும் பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால், கூடுதலாக 10 விழுக்காடு தள்ளுபடியையும் பெறலாம்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிய சரக்கு சேமிப்பு கிடங்கை நிறுவிய அமேசான்..!

ABOUT THE AUTHOR

...view details