அமேசான் செயலி இதுவரை பணப் பரிவர்த்தனை, மொபைல் ரீ-சார்ஜ், இணையத்தில் கட்டணம் கட்டுவது, பொருட்கள் வாங்குவது போன்ற சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்தது.
இனி அமேசான் செயலியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! - Amazon app
பெங்களூரு: அமேசான் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமேசான் செயலி விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. மேலும், இந்தச் சேவை குறித்த அறிவிப்பினை கடந்த சனிக்கிழமை வெளிட்டுள்ளது.
இது குறித்து அமேசான் இயக்குநர், அமேசான் கிளியர் டிரிப் என்ற நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டு விமான பயணச்சீட்டு சேவையை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களது செயலியில் முன்பதிவு செய்த விமான பயணச்சீட்டினை ரத்து செய்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கமாட்டோம். அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் உள்ளன எனக் கூறியுள்ளார்.