ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைகோயிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு 46 நாட்கள் இந்த பயணம் நீடிக்கும்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கிய அமர்நாத் யாத்திரை - ஜம்மு-காஷ்மீர்
காஷ்மீர்: குகை கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று தொடங்கியது.
இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பக்தர்கள் அமைதியான, பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய சர்வதேச எல்லை, எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரைக்கு பல்டால் பேஸ் கேம்ப்பில் இருந்து முதல் குழு இன்று புறப்பட்டுச் சென்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாத்ரீகர்கள் சென்ற பேருந்தை பயங்கரவாதிகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.