ஸ்ரீநகர்:2020ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் யாத்திரை வாரியத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட்-19 அச்சுறுத்தலுக்கிடையே அமர்நாத் யாத்திரை நடைபெற வேண்டுமா? என்பது தொடர்பான கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஜூலை21) நடந்தது.
இதில், ஜம்மு, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜிசி முர்மு, காவல்துறை உயர் அலுவலர்கள், ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, கோவிட்-19 பரவலை கருத்தில்கொண்டு இந்தாண்டு அமர்நாத் யாத்திரையை ரத்துசெய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.