கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரத்யேக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.
இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சித்து, “மறுமலர்ச்சி மற்றும் புத்துயிரை நோக்கி பஞ்சாபை முன்னெடுத்து செல்லுங்கள்” என்றார். மேலும் உள்ளாட்சியில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதலா? கேப்டன் அமரீந்தர் சிங் பதில்! இது குறித்து பதிலளித்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், “நவ்ஜோத் சிங் குழந்தையாக இருக்கும் போதே தெரியும். அவருடன் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அவரின் விருப்பங்களை நான் பரிசீலிப்பேன். என்னிடம் ஏதேனும் விவாதிக்க நினைத்தாலும், அவர் என்னிடம் கேட்கலாம். நான் தயாராக இருக்கிறேன்.
அவருடைய விருப்பம் குறித்தும் நான் பரிசீலிப்பேன்” என்றார். எனினும் மத்திய பிரதேசத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முதலமைச்சர் மறுத்துவிட்டார். இது அவர்களின் உள்பிரச்சினை என்றும், இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைமை கருத்து தெரிவிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
நவ்ஜோத் சிங் சித்து முதலில் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனித்துவந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டார். இதற்கிடையில் அவர் இவ்வாறு பேசி உள்ளார். முன்னதாக சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இதனால் பஞ்சாப் மாநில அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் பஞ்சாபில் 2017 தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ராஜ்ய சபா உறுப்பினராகும் ரஞ்சன் கோகோய்!