தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல... அமைச்சர் சர்ச்சை கருத்து...! - அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல

அமராவதி: ஆந்திர தலைநகருக்கு அமராவதி ஏற்ற இடமல்ல என அம்மாநில அமைச்சரின் கருத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதிய தோற்றம்

By

Published : Aug 21, 2019, 9:04 PM IST

ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்த பின் ஆந்திர அரசின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, அமராவதியை பிரமாண்டமாக உருவாக்குவதற்கும், அரசு கட்டடங்களை நவீன மற்றும் பாரம்பரியமிக்கதாகக் கட்டவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைதொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் அமராவதி தலைநகருக்கு ஏற்ற இடமல்ல என அம்மாநில அமைச்சர் சத்யநாராயணா போஸ்டா நேற்று கூறியிருந்தார். ''மேலும் சந்திரபாபு நாயுடு எடுத்தது தவறான முடிவு என்றும், அமராவதியில் கிருஷ்ணாநதி பாய்வதால், இந்த பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் வெள்ளநீரை முறையாக அணைகள், கால்வாய்கள் உள்ளிட்டவை கட்டப்பட வேண்டியுள்ளது'' எனக் கூறியிருந்தார்.

அமராவதி மாதிரி தோற்றம்

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைச்சர் சத்யநாராயணா போஸ்டாவின் கருத்து பொறுப்பற்றது. தலைநகருக்கு அமராவதி ஏற்றதல்ல என்று ஆதாரமில்லாமல் பேசுகிறார். மேலும் துறைமுகங்கள் கட்டப்பட்டு சர்வதேச தொழில் பகுதியாக மாற்ற முடியும் என்பதால் அமராவதி முதல் தேர்வாக இருந்தது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details