கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். சித்த ராமையாவின் உடல் நலம் குறித்து அறிந்துகொள்ள செய்தியாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் நிறைந்து காணப்பட்டனர்.
சித்த ராமையாவை நேரில் சந்தித்து நலம் பெற வாழ்த்து தெரிவித்த எடியூரப்பா இந்த நிலையில் சித்த ராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், தாம் 100 சதவீதம் பூரண உடல்நலத்தோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், “நான் பூரண உடல் நலத்துடன் உள்ளேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கவலைகொள்ள வேண்டாம்.
மருத்துவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தியுள்னர். ஆகவே பார்வையாளர்களை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்” என தெரித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் சித்த ராமையா விரைவில் பூரண குணமடையவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சித்த ராமையாவுக்கு இதயம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். அவருடன் எனக்கு நீண்ட நாட்கள் நட்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 2 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. பாஜக 12 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து சித்த ராமையா தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.