தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2020, 12:59 PM IST

ETV Bharat / bharat

மின் தேவையை சமாளிக்க ரூ.1.4 கோடி ஒதுக்கீடு - ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: வளர்ந்து வரும் மின் தேவையை சமாளிக்க நடப்பாண்டில் ஆயிரத்து 468 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குடியரசு தின விழாவில் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கொடியேற்றிவைத்த ஆளுநர் கிரண் பேடி
கொடியேற்றிவைத்த ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் வீரதீர செயல்கள் புரிந்த காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து அலங்கார வாகன அணிவகுப்பு, காவல் துறையினர் அணிவகுப்பு, பள்ளி மாணவ மாணவர்கள், என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

குடியரசு தின விழாவில் ஆளுநர் கிரண்பேடி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவது;

  • புதுச்சேரி மாநிலம் நடைமுறை நிர்வாகக் காரணங்களால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றி வருகின்றது.
  • புதுச்சேரி மாநிலத்தைச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட மாநிலமாக இந்திய அரசின் விருது கிடைத்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளை பாராட்டுகின்றேன்.
  • புதுச்சேரியில் வளர்ந்துவரும் மின் தேவையை சமாளிக்க நடப்பாண்டில் ஆயிரத்து 468 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாவினரின் வருகை இந்தாண்டு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலைமை அமைதியாகவும், கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வருகின்றது.
  • அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு, நேரடி நியமனங்கள் மூலமும் நிரப்ப உடனடி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 10 என்ற அளவிலும் தேசிய அளவில் 34 என்று இருப்பதைக் காட்டிலும் இது குறைவாகும்.
  • அரசுப்பள்ளி மாணவர்களும் நீட்தேர்வை எதிர்கொள்ள தரமான பயிற்சிகள் அளிக்கப்படும் என்பன ஆளுநர் உரையில் இடம்பெற்றன.
    கொடியேற்றிவைத்த ஆளுநர் கிரண் பேடி

இதையும் படிங்க: வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் புதுச்சேரி தலைமைச் செயலகம்!

ABOUT THE AUTHOR

...view details