புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே போதையில் இருந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவ்வழியே சென்றவர்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞர், அந்த வழியே சென்ற வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளார். பின்னர் இது குறித்து தகவலறிந்த பெரியகடை காவல் துறையினர் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க முயன்றனர்.
அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி காவல் துறையினரைஅந்த இளைஞர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அவரது கை கால்களை பிடித்தபடி குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். இக்காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.