நீதித்துறையில் சாதியப் பாகுபாடு தொடர்வதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்துவரும் வேளையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் சாதியப் பாகுபாடு, குடும்பத்தினருக்கு முன்னுரிமை தருவது ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறையில் தொடரும் சாதியம் - நீதிபதி புகார்!
லக்னோ: நீதிபதிகளை நியமனம் செய்வதில் சாதிய பாகுபாடு தொடர்வதாக பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
SC
முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் நீதித்துறையில் சாதியப் பாகுபாடு உள்ளதென சக நீதிபதிகள் மேல் குற்றம்சாட்டினார். இவரைத் தொடர்ந்து பல சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். தற்போது பணியில் உள்ள நீதிபதி ஒருவரே நீதித்துறையில் இருக்கும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Last Updated : Jul 3, 2019, 1:58 PM IST