தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கீழமை நீதிமன்றத்தை அணுக சிறப்பு அமர்வு உத்தரவு; சின்மயானந்தா வழக்கில் திடீர் திருப்பம்! - சின்மயானந்தா

லக்னோ: பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தா தொடர்ந்த வழக்கில், தன்னை கைது செய்வதற்கு தடைவிதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு மறுத்து, கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.

Chinmayanandha

By

Published : Sep 23, 2019, 7:17 PM IST

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்திவருகிறார். அதில் படிக்கும் மாணவிகளின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளதாகவும் தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்து வருவதாகவும், 23 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரிக்கவும், மாணவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவும், மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தா வழக்கு தொடர்ந்தார். பணம் பறிப்பு வழக்கில் தன்னை கைது செய்வதிலிருந்து தடைவிதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது சிறப்பு புலனாய்வு குழுவின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு எனக் கூறி சட்டக்கல்லூரி மாணவி கீழமை நீதிமன்றத்தை அணுக சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details