தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிரடி சச்சின், கலக்கல் கபில்தேவ் - மொடீரா உருவாக்கமும் வரலாறும் - உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா பற்றிய சிறப்பு தொகுப்பு...

All you need to know about the world's largest cricket stadium
All you need to know about the world's largest cricket stadium

By

Published : Feb 24, 2020, 1:32 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம், மறுசீரமைக்கப்பட்டு மொடீரா ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டது. இங்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்தார் படேல் ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் புதிய மொடீரா ஸ்டேடியத்தின் முதல் தோற்றத்தை ட்விட்டரில் வெளியிட்டது. இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழும், 90,000 பேர் அமரக்கூடிய ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் (MCG ) மைதானத்தைவிட மிகப்பெரிய மைதானமாகும்.

இந்த பிரமாண்டமான அரங்கம், உலகெங்கிலும் கிரிக்கெட் வரைபடத்தில் அகமதாபாத்தை ஒரு அடையாளமாக நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், தடகள டிராக், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ், பூப்பந்து மற்றும் நீச்சல் போன்ற பிற விளையாட்டுகளையும் மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

மொடீரா அரங்கம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • மொடீரா மைதானம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும்.
  • இந்த அரங்கம் முதலில் குஜராத் ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் சர்தார் படேலை நினைவுகூரும் விதமாக சர்தார் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டது.
  • பி.சி.சி.ஐ அளித்துள்ள தகவலின்படி, இந்த மொடீரா ஸ்டேடியம் 1,10,000 பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாக திகழ்கிறது. இது ஆஸ்திரேலியாவின் எம்.சி.ஜியை விட 20,000 பேர் அதிகம் அமரக்கூடியது.
  • ஒட்டுமொத்தமாக, மொடீரா மைதானம் உலகின் இரண்டாவது பெரிய அரங்கமாக இருக்கும். வட கொரியாவின் பியோங்யாங்கில் உள்ள ருங்கிராடோ மே டே ஸ்டேடியம் 1,14,000 பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய அரங்கமாகும்.

செலவு & வடிவமைப்பு

  • 63 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் அரங்கத்தின் ஒட்டுமொத்த சீரமைப்புக்கு சுமார் ரூ. 8 பில்லியன் செலவாகும்.
  • குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் (ஜி.சி.ஏ) மைதானத்தை மறுவடிவமைக்க, முதன்மை கட்டடக் கலைஞர் பாப்புலஸ், திட்ட மேலாண்மை ஆலோசகர், எஸ்.டி.யூ.பி ஆலோசகர்கள் மற்றும் டெவலப்பர் எல் அண்ட் டி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது.
  • இந்த ஸ்டேடியம் தூண்கள் எதுவும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் பார்வையாளர்கள் அரங்கத்தின் எந்த இடத்திலிருந்தும் முழு விளையாட்டையும் தடையின்றி பார்க்க முடியும்.
  • கிரிக்கெட் மைதானத்தில் வழக்கமான ஃப்ளட்லைட்டுகளுக்கு பதிலாக கூரையில் எல்.ஈ.டி விளக்குகள் பதிக்கப்பட்டிருப்பது அரங்கத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகும். இந்தியாவில் இதுபோன்ற முதல் வடிவமைப்பு இதுவாகும்.
  • எல்.ஈ.டி விளக்குகள் PTFE சவ்வுடன் பாக்டீரியா எதிர்ப்புடனும் , தீ பிடிப்பதை தடுக்கும் வகையிலும் நிறுவப்பட்டுள்ளன.
  • அரங்கத்தின் கூரை இலகுவாகவும் , இருக்கை தனித்தனியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இது நில அதிர்வு காலங்களில் மக்களை காப்பாற்றும் . மேலும் இது பூகம்பத்தை எதிர்க்கும் தன்மையுடையது.
  • மொடீரா ஸ்டேடியத்தில் சுமார் 60,000 பேர் ஒரே நேரத்தில் செல்ல வசதியாக ஒரு பெரிய வளைவு நுழைவு வாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சிறிய நிகழ்ச்சிகளுக்கு மைதானத்தின் கீழ் பகுதியை மட்டும் நிரப்பும் வகையில் ஸ்டேடியம் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, இது மிகப்பெரிய அரங்கம் நிரம்பவில்லை என்றாலும் கூட்டத்தின் சூழ்நிலையை பராமரிக்க உதவும்.
  • மும்பையைச் சேர்ந்த "ஸ்பான் ஆசியா சமையலறை ஆலோசகர்கள் " சலுகை கவுண்டர்கள், பிரதான ஸ்டேடியம் சமையலறைகள், பிளேயர் சமையலறைகள், விஐபி / விவிஐபி பெட்டிகள், கார்ப்பரேட் பெட்டிகள், பிரஸ் & மீடியா பெட்டிகள் மற்றும் ஜி.சி.ஏ கிளப் ,பேன்ட்ரீஸ் போன்ற அனைத்து எஃப் அண்ட் பி தொடர்பான பகுதிகளிலும், எல் அண்ட் டி நிறுவனங்களுடன் பணியாற்ற நியமிக்கப்பட்டனர்.

வசதிகள்

  • சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் ஒரு பெரிய கிரிக்கெட் மைதானமும், இரண்டு சிறிய கிரிக்கெட் மைதானங்களும், 75 குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட் பெட்டிகளும், ஜி.சி.ஏ உறுப்பினர்களுக்கான கிளப் ஹவுஸும் இருக்கும்.
  • உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் தனித்தனி குழு சந்திப்பு அறைகள் கொண்ட நான்கு டிரஸ்ஸிங் அறைகளையும் இந்த அரங்கம் கொண்டிருக்கிறது.
  • இந்த பிரதான மைதானத்திற்கு வெளியே, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், உள் விளையாட்டு கிரிக்கெட் அகாடமி, பூப்பந்து மற்றும் டென்னிஸ் கோர்ட்டுகள், ஸ்குவாஷ் அரங்கம், டேபிள் டென்னிஸ் பகுதி, 3 டி ப்ரொஜெக்டர் தியேட்டர் மற்றும் மூன்று பயிற்சி மைதானங்களைக் கொண்ட ஒரு கிளப்ஹவுஸ், அதில் 55 அறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. .
  • இந்த அரங்கத்தில் உணவகங்கள், உடற்பயிற்சி கூடம் மற்றும் பார்ட்டி பகுதிகள் ஆகியவை இருக்கும்.
  • மொடீரா ஸ்டேடியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வசதிகள் உள்ளன.
  • முன்னதாக ஒரு நுழைவு வாயில்களை கொண்ட இந்த மைதானம் , மறுவடிவமைக்கப்பட்ட பிறகு இப்போது மூன்று நுழைவு வாயிலை கொண்டிருக்கும்.
  • தற்போது கட்டுமானத்தில் உள்ள மெடீரோ ரயில் நிலையம் மூலம் எதிர்காலத்தில் இன்னொரு நுழைவு வாயில் கூடுதலாக அமைக்கப்படும்.

ஸ்டேடியத்தின் வரலாறு

  • குஜராத் அரசு 1982ஆம் ஆண்டில் சபர்மதி ஆற்றின் கரையில் 100 ஏக்கர் நிலத்தை நன்கொடையளித்த பின்னர் சர்தார் படேல் மைதானம் அமைக்கப்பட்டது.
  • இந்த அரங்கத்தை முதலில் பிரபல கட்டடக் கலைஞர் சஷி பிரபு வடிவமைத்தார், அதன் கட்டுமானப் பணிகள் ஒன்பது மாதங்களுக்குள் நிறைவடைந்தன.
  • 2006 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக மூன்று புதிய பிட்சுகள் மற்றும் ஒரு புதிய அவுட்பீல்ட் போடப்பட்டபோது, மொடீரா மைதானம் அதன் முதல் பெரிய புனரமைப்பைக் கண்டது.
  • 1984ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியே இந்த அரங்கத்தின் முதல் போட்டியாகும்.
  • 2011 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வென்றது, இந்த மைதானத்தில் அதிக கூட்டம் சேர்த்த பெருமைக்குள்ளான வீரர்களில் யுவராஜ் சிங் முக்கியமானவர்.

சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த சாதனைகள்

  • இந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 1986–87இல் 10,000 டெஸ்ட் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் பெற்றார்.
  • 1983-84ல் இந்த மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவ், சர் ரிச்சர்ட் ஹாட்லியின் 432 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனையை முறியடித்தார், இதனால் அந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1999 அக்டோபர், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு இதே மைதானத்தில் நிகழ்ந்தது.
  • இந்த இடத்தில்தான் 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 18,000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றார்.
  • 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட்டில் ஏபி டிவில்லியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details