பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளான சந்திரன், பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நேர்கோட்டில் வந்து சூரியனை மறைக்கும் அற்புத நிகழ்வையே சூரிய கிரகணம் என்றழைக்கிறோம்.
சூரிய கிரகணத்தில் மூன்று வகை உண்டு. சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைத்துக் கொண்டால் அது முழு சூரிய கிரகணம், பகுதி மறைந்தால் அது பகுதி சூரிய கிரகணம், சூரியனை முழுமையாக மறைத்து ஒரு வளையம் மட்டும் தோன்றினால் அது சூடாமணி சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும்.
இன்று நிகழவிருப்பது சூடாமணி சூரிய கிரகணம். இந்த அரிய நிகழ்வானது வட இந்தியாவில் காலை 10:25 மணிக்குத் தோன்றி பிற்பகல் 1:54 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை யூ-டியூப், பேஸ்புக், ஸூம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப ஆரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சூடாமணி சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் நெருப்பு வளையம், ராஜஸ்தானின் சூரத்கர், அனுப்கர், ஹரியானாவின் சர்சா, குருக்ஷேத்ரா, உத்தரகாண்டின் டேராடூன், சாம்பா, சாமோலி, ஜோஷிமாத் ஆகிய பகுதிகளிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், இந்த நெருப்பு வளையம் வெறும் ஒரு நிமிடம் மட்டுமே காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி தென் இந்தியாவில் இது பார்க்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தியாவில் சூடாமணி சூரிய கிரகணம் அடுத்ததாக வரும் 2031ஆம் ஆண்டு மே 21ஆம் தேதிதான் நடக்கும் எனவும், அதேபோன்று முழு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா கூறுகையில், "அறிவியல் மீது இளைஞர்கள், பொதுமக்களுக்கு ஈர்ப்பு உண்டாவதற்குக் கிரகணம் போன்ற வான்வெளி நிகழ்வுகளே அற்புதமான வாய்ப்பாகும்" என்றார்.
சூரிய கிரகணத்தின்போது செய்ய வேண்டியவை: