தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம்; தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! - 750 மெகாவாட் திறன் மின் உற்பத்தி ஆலை

டெல்லி: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டமான ரேவா மின்நிலையத்தை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்த முக்கிய தகவல்களின் தொகுப்பு:

Solar project
Solar project

By

Published : Jul 10, 2020, 10:43 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா பகுதியில் 750 மெகாவாட் திறனுடன் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை இன்று (ஜூலை 10) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.

ரேவா மின் உற்பத்தி ஆலையின் முக்கிய அம்சங்கள்:

  • ரேவா மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 15 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியேற்றம் குறைக்கப்படும்.
  • இந்தத் திட்டம் உலக வங்கித் தலைவரால் மிகச் சிறந்த புதிய முயற்சி என அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்றுள்ளது.
  • திட்டத்தில் தயாரிக்கப்படும் 76% மின்சாரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவைக்கும், 24% மின்சாரம் டெல்லி மெட்ரோ சேவைக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
  • கிரிட் செயல்பாட்டு முறையில் நவீன தொழில்நுட்பம் கொண்டு அமைந்துள்ள நாட்டின் முதல் மின் உற்பத்தி ஆலை இது.
  • ஆயிரத்து 500 ஹெக்டேரில் சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
  • சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்தியப் பிரதேச மின் பகிர்மானக் கழகம் ஆகியவற்றின் கூட்டு பங்களிப்பாக இந்தத் திட்டம் செயல்படுகிறது.

இதையும் படிங்க:அந்நிய முதலீடுகளில் கவனம் செலுத்தும் நேரமிது

ABOUT THE AUTHOR

...view details