இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 முக்கிய மைல்கல்லை அடையவுள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் இந்தச் சாதனைத் திட்டத்தின் செலவு, கால அட்டவணை, முக்கிய இலக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு இதோ...
- சந்திரயான் 2 மொத்த செலவு = ரூ. 978 கோடி
- திட்டத்திற்கான செலவு = ரூ. 603 கோடி
- விண்ணில் செலுத்துவதற்கான செலவு = ரூ. 375 கோடி
சந்திரயான் 1 திட்டத்தின் கால அட்டவணை:
- 1999 இந்திய விண்வெளி விஞ்ஞானிகளால் திட்டம் உருவாக்கப்பட்டது
- ஆகஸ்ட் 15, 2003 சந்திரயான் திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்
- அக்டோபர் 22, 2008 சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது
- நவம்பர் 08, 2008 சந்திரயான் 1 நிலவின் வட்டப்பாதையில் நுழைந்தது
- ஆகஸ்ட் 28, 2009 சந்திரயான் 1 திட்டம் முடிக்கப்பட்டது