தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனாவை எதிர்த்து அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செயலாற்றுகின்றன' - மோடி

டெல்லி: கரோனா தொற்றுப்பரவலை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Amit Shah COVID-19 Shah on COVID-19 Indo China relations Rahul Gandhi BJP virtual rally பாஜக அமித்ஷா மோடி எல்லைப்பிரச்னை
அமித்ஷா

By

Published : Jun 9, 2020, 1:50 AM IST

ஒடிசாவைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பேசிய அவர், இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின் வலுவான பாதுகாப்புக் கொள்கையை கொண்டிருப்பது இந்தியாதான். இந்தியாவின் எல்லைக்குள் எந்த நாடு நுழைய முயற்சித்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மோடி அரசு இந்திய இறையாண்மையை பாதுகாக்கிறது"என்றார்.

மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைத்து வருவதாக தெரிவித்த அவர், " எதிர்க்கட்சிகள் பாஜக அரசை விமர்சிப்பதையே முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளன. ஆனால், குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனையே மத்திய அரசு கருத்தில் கொள்கிறது.

இதுவரை, 1.2 கோடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு 1.70லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகுப்புகளை அறிவித்துள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில், வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதைத் தவிர்த்து எந்த உருப்படியான செயலையும் காங்கிரஸ் செய்யவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details