தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஃபேல் ஜெட் விமானங்கள் எப்போது வந்தடையும்...மத்திய அமைச்சர் பதில்! - ரஃபேல் ஜெட் விமானங்கள்

டெல்லி: வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், ரஃபேல் ஜெட் விமானங்கள் முழுவதும் இந்தியாவுக்கு வந்தடையும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரஃபேல்
ரஃபேல்

By

Published : Feb 8, 2021, 11:01 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து, 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தத்தை மேற்கெண்டது. முதற்கட்டமாக, 2020ஆம் ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி, 5 ஜெட் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் அமைந்துள்ள விமான படை தளத்திற்கு வந்தடைந்தது. பின்னர், செப்டம்பர் 10ஆம் தேதி, அது இந்தியா விமானப் படையில் இணைக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, மூன்று ஜெட் விமானங்களும் மூன்றாவது கட்டமாக ஜனவரி 27ஆம் தேதி மூன்று விமானங்களும் இந்தியாவிற்கு வந்தடைந்தன. இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், ரஃபேல் ஜெட் விமானங்கள் முழுவதும் இந்திய விமான படையில் இணைக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பாஜக எம்பி மகேஷ் பொடார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 7 ஜெட் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்படும் என்றார். பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details