தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபிஇ கிட் ஏற்றுமதி விண்ணப்பங்கள் ரத்து... புதிய நிபந்தனைகள் வெளியீடு! - பிபிஇ கிட் ஏற்றுமதி தொடக்கம்

டெல்லி: பிபிஇ கிட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்த வர்த்தக அமைச்சகம், ஏற்றுமதிக்கான புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

பிபிஇ
பிபிஇ

By

Published : Jul 22, 2020, 9:28 AM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. அதே போல், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் முழு பாதுகாப்பு கவச உடை என அழைக்கப்படும் பிபிஇ கிட் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். அதன்படி, நாட்டில் பிபிஇ கிட்டுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாத காரணத்திற்காக, மாதம்தோறும் 50 ஆயிரம் பிபிஇ கிட்கள் மட்டுமே ஏற்றுபதி செய்ய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி), பிபிஇ கிட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாதம்தோறும் 50 ஆயிரம் பிபிஇ கிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிரத்யேக வழிமுறைகளையும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஜூலை 1 முதல் 3ஆம் தேதி வரையில் வந்த அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து பார்த்ததில், அவை எதுவும் அரசின் வழிமுறைகளை பூர்த்தி செய்யாததால் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, புதிதாக தயாரிக்கப்பட்ட அரசு ஏற்றுமதி நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய விண்ணப்பங்களை ஆன்லைனில் மீண்டும் பதிவு செய்ய தெரிவித்துள்ளனர். ஜூலை மாத ஏற்றுமதிக்கு, வரும் ஜூலை 22 முதல் 24ஆம் தேதி இடையில் வரும் திருத்தப்பட்ட வழிமுறைகளை பின்பற்றிய விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். ஆகஸ்ட் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். இந்த ஏற்றுமதி உரிமம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுப்படியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details