விசாகப்பட்டினம்: ஆந்திராவின் துறைமுக நகரமான 'விசாகா எஃகு ஆலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
விசாகப்பட்டினத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
விசாக் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, எஃகு ஆலையைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறின. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி விஜயாசை ரெட்டி ட்விட்டரில், “விசாக் எஃகு ஆலையை தனியார்மயமாக்குவது தொடர்பான பிரச்னையில் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு எனது ஆதரவை வழங்கினேன். மக்களின் நலனுக்காக எஃகு ஆலையை புதுப்பிப்பதில் எனது கவனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தும் ஆயுதம் எடப்பாடி- எஸ்பி வேலுமணி