மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து மே மாதம் 30ஆம் தேதி மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களுக்கான துறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், அமித்ஷாவுக்கு உள் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், நாட்டின் 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.