தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.அதேபோல் புதுச்சேரி அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அரசு சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சரும் காங்கிரஸ் மாநில தலைவருமான நமச்சிவாயம் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் உருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் 51ஆவது நினைவுதினம்: புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் மரியாதை - 51st Anniversary of Anna
புதுச்சேரி அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினத்தை அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் அனுசரிப்பு
இதேபோன்று திமுக சார்பில் அதன் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுகவினர் அண்ணாவின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்