தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Hindi Imposition update அமித் ஷாவின் இந்தி திணிப்பு பேச்சு: பாஜக முதலமைச்சரின் எதிர்ப்பு! - imposition of Hindi language

Hindi Imposition update பெங்களூரு: இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த இந்தியை பயன்படுத்தலாம் என பதிவிட்ட அமித் ஷாவுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.

எடியூரப்பா

By

Published : Sep 16, 2019, 7:59 PM IST

Hindi Imposition update இருநாட்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்துவதற்கு இந்தி மொழியை பயன்படுத்தலாம். இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழிக்கு மட்டுமே சக்தி உண்டு என பதிவிட்டது இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் கட்சியினரிடயே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அமித் ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமமானவையே. அவ்வாரு தான் கர்நாடகாவில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் கன்னடம் தான் முதன்மை மொழியாகும். கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ள மாட்டோம். கன்னட மொழியையும், கர்நாடகாவின் கலாசாரத்தையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை இந்தி திணிப்பு பேச்சுக்கு மற்ற மாநிலங்களிலும், அரசியல் கட்சியினரிடம் இருந்து மட்டுமே எதிர்ப்பு வந்த நிலையில், முதன்முறையாக பாஜக முதலமைச்சர் ஒருவர் அமித் ஷா கருத்துக்கு எதிராக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details