டெல்லி:ஆன்லைனில் மருந்துகள் விநியோகிப்பது தொடர்பான சர்ச்சைக்கு இடையே, மார்ச் மாதத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் மருந்துகளை வாங்கவும், நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அறிக்கையில், “கோவிட் -19 பெருந்தொற்று நோய் காரணமாக எழும் அவசரகால தேவைகளையும், பொது நலனையும் பூர்த்தி செய்ய நுகர்வோரின் வீட்டு வாசலில் மருந்துகளை சில்லறை விற்பனை செய்வது அவசியம்.
இது மார்ச் 26 அன்று சுகாதார அமைச்சின் அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து இந்திய உரிமதாரர்களும் வீட்டிலேயே மருந்துப் பொருள்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.