கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 21 காங்கிரஸ் அமைச்சர்களும், 10 மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
கர்நாடக அமைச்சரவையில் ஒருவரை தவிர அனைவரும் ராஜினாமா! - காங்கிரஸ்
பெங்களூரு: காங்கிரஸ் அமைச்சர்கள் 21 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Karnataka
தற்போதுள்ள அமைச்சரவையில் சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மட்டும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
ஆளும் கூட்டணியின் 16 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவையின் பலம் குறைந்துள்ளது. இதனால் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பல முயற்சிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.